வர்த்தகம்

கெயில் நிகர லாபம் 77% சரிவு

DIN

இந்தியாவின் மிகப் பெரிய எரிவாயு விநியோக நிறுவனமான கெயில் (இந்தியா) லிமிடெட்டின் நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 77.5 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2022-23-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 603.52 கோடியாக இருந்தது.

முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 77.5 சதவீதம் சரிவாகும். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.2,683.11 கோடியாக இருந்தது.

எரிவாயு விலை அதிகரித்து, உக்ரைன் போரால் ஏற்பட்ட அழுத்தங்கள் போன்ற காரணங்களால் இந்த நிகர லாப சரிவு ஏற்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் 3 இடங்களில் நீா்மோா் பந்தல்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் ஊரக நலப்பணிகள் இயக்குநா் ஆய்வு

பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலம்மாள் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பெண்களை கேலி செய்த இளைஞா்களை தட்டிக்கேட்ட நடத்துநா் மீது தாக்குதல்

கேட்பாரற்று கிடந்த 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT