முகப்பு
சென்னை

பூனையை கொன்ற நரிக்குறவர் கைது

சென்னை கிண்டியில் பூனையை கொன்றதாக நரிக்குறவர் கைது

Updated On : 2 ஏப்ரல், 2013 at 4:45 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:07 PM

சென்னை கிண்டியில் பூனையை கொன்றதாக நரிக்குறவர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது:

கிண்டி மடுவங்கரை பாலத்தின் கீழ் வசிப்பவர் நாகப்பன் (65).  இவர் கன்னிகாபுரம் பகுதியில் வீடுகளில் வளர்க்கும் பூனைகளைப் பிடித்து கொன்று இறைச்சியை விற்பதாக ப்ளூ கிராஸ் அமைப்பினருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் வந்தது. அந்த தகவலின் அடிப்படையில் நாகப்பன் வசிக்கும் இடத்துக்கு ப்ளூ கிராஸ் அமைப்பினர் சென்றனர்.

Advertisement

அப்போது அங்கு பூனை அடித்துக் கொல்லப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ப்ளூ கிராஸ் அமைப்பினர் கிண்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த கிண்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பூனை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீஸார் மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நாகப்பனை கைது செய்தனர். அவரிடம் போலீஸார் விசாரணை செய்ததில் அவர் பூனை இறைச்சியை ஹோட்டலுக்கு பணத்துக்காக விற்பது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.