முகப்பு
சென்னை

விபத்தில் ஐ.ஐ.டி. மாணவர் சாவு

சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலையில் திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் ஐ.ஐ.டி கல்லூரி மாணவர்

Updated On : 2 ஏப்ரல் 2013, 5:03 am IST
பகிர்:

சென்னை, கிழக்கு கடற்கரைச் சாலையில் திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் ஐ.ஐ.டி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்தது: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சயந்த் (21). இவர் சென்னை ஐ.ஐ.டி.-யில் பொறியியல் படித்து வந்தார். கிழக்கு கடற்கரைச் சாலை, சோழிங்கநல்லூர் - அக்கரை சோதனைச் சாவடியிடையே திங்கள்கிழமை சயந்த் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது எதிரே வந்த மணல் லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே சயந்த் உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.