முகப்பு
சென்னை

"எனது அஞ்சல் தலை' திட்டம் நாளை அறிமுகம்

வாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன்கூடிய அஞ்சல் தலைகளை அறிமுகப்படுத்தும் புதிய திட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 3)

Updated On : 2 மே 2013, 12:06 pm IST
பகிர்:

வாடிக்கையாளர்களின் புகைப்படத்துடன்கூடிய அஞ்சல் தலைகளை அறிமுகப்படுத்தும் புதிய திட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 3) தொடங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தில் அஞ்சல் தலைகளின் இடதுபுறத்தில் வாடிக்கையாளர்களின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். ரூ.5 மதிப்பு கொண்ட இந்த அஞ்சல் தலைகளை இந்தியா முழுக்க தபால்களை அனுப்பப் பயன்படுத்தலாம்.

"எனது அஞ்சல்தலை' தேவைப்படும் வாடிக்கையாளர்கள், வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அண்ணா சாலையில் உள்ள அஞ்சல்தலை சேகரிப்பு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். புகைப்படத்துடன் கூடிய 12 அஞ்சல் தலைகளைப் பெற கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.