2-ம் நாளாக பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, மீடியா பங்குகள் லாபம்!
இன்றைய பங்குச்சந்தைகள் வர்த்தக நிலவரம் பற்றி...
அமெரிக்க - ஈரான் அமைதி ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை சரிவால் தொடர்ந்து 2-ம் நாளாக இன்றும்(ஜூன் 16) பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,526.77 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 313.88 புள்ளிகள் உயர்ந்து 76,578.21 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 70.90
புள்ளிகள் உயர்ந்து 23,924.80 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
Advertisement
Advertisement
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.10 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.23 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.
நிஃப்டி 50 பங்குகளில் பஜாஜ் பைனான்ஸ், டாடா நுகர்வோர் பொருள்கள், டைட்டன், ஐடிசி, என்டிபிசி ஆகிய நிறுவனங்கள் லாபமடைந்துள்ளன.
துறைவாரியாக நிஃப்டி ஐடி, மீடியா, நிதி சேவைகள், நுகர்வோர் பொருள்கள் ஆகியவற்றின் குறியீடுகள் உயர்ந்தும் பார்மா, உலோகங்கள் குறியீடுகள் சரிந்தும் வருகின்றன.
சென்செக்ஸில் 30 பங்குகளில் சன் பார்மா, அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவனங்கள் சரிந்தும் மற்ற நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தும் வர்த்தகமாகின்றன.
பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.17% குறைந்து 83.03 டாலராக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா உயர்ந்து 94.53 ஆக உள்ளது.
Stock Market today: Sensex rises 400 pts, Nifty near 24,000
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.