FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவு! ஐடி, பார்மா பங்குகள் உயர்வு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

Updated On : 20 ஜூலை 2026, 12:00 pm IST
கோப்புப்படம் - ENS
பகிர்:

வாரத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 20) இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ், நிஃப்டி50 குறியீடுகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,151.45 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 533.74 புள்ளிகள் குறைந்து 77,617.71 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதற்கு முன்னதாக 670 புள்ளிகள் வரை குறைந்தது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 127.65 புள்ளிகள் குறைந்து 24,206.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Advertisement

Advertisement

நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.18 சதவீதம், 0.31 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகின்றன.

ட்ரென்ட், சிப்லா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், பாரதி ஏர்டெல், என்டிபிசி ஆகியவை நிஃப்டி50 குறியீட்டில் அதிக லாபம் நிறுவனங்களாக உள்ளன. ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி, கோடக் மஹிந்திரா, மாருதி சுசுகி, ஜியோ பைனான்சியல் ஆகியவை சரிவைச் சந்தித்து வருகின்றன.

துறைசார் குறியீடுகளில், நிஃப்டி தனியார் வங்கிகள் கடும் சரிவைச் சந்தித்தன. வங்கிகள், நிதி சேவைகள் குறியீடும் சரிந்தன. அதேநேரத்தில் பொதுத்துறை வங்கிகளின் குறியீடுகள் உயர்ந்தன. ஐடி, மீடியா, உலோகம், பார்மா குறியீடுகளும் உயர்ந்துவ வர்த்தகமாகின்றன.

மீண்டும் ஈரான் - அமெரிக்கா இடையேயான போரால் பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 90 டாலர் என்ற அளவைத் தாண்டியது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 96.48 ஆக உள்ளது.

summary

Stock market today: BSE Sensex down over 670 points, NSE Nifty50 below 24,200

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments