2-ம் நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...
அமெரிக்கா - ஈரான் இடையே போர்ப் பதற்றத்தால் தொடர்ந்து 2 ஆவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,576.76 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை முதலே சென்செக்ஸ் புள்ளிகள் குறைந்து வந்தன.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 539.34 புள்ளிகள் சரிந்து 76,933.59 புள்ளிகளில் நிலை பெற்றது.
Advertisement
Advertisement
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 116.90 புள்ளிகள் குறைந்து 24,090.85 புள்ளிகளில் நிறைவடைந்தது.
நிஃப்டி 50 பங்குகளில் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎப்சி வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் அதிக சரிவைச் சந்தித்தன.
நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.1 சதவீதம் மற்றும் 0.13 சதவீதம் சரிந்து முடிந்தன.
துறைவாரியாக, நிஃப்டி பார்மா, தனியார் வங்கி, நுகர்வோர் பொருட்கள் ஆகிய குறியீடுகள் மட்டும் லாபம் பெற்ற நிலையில் மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிந்தன.
30 சென்செக்ஸ் நிறுவனங்களில் கோடக் மஹிந்திரா வங்கி, டெக் மஹிந்திரா, பெல், அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐசிஐசிஐ வஞ்சி ஆகியவை மட்டும் லாபம் பெற்றன.
பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 81.15 டாலராக உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.50 ஆக இருந்தது.
அமெரிக்கா - ஈரான் இடையே போர்ப் பதற்றத்தால் இந்திய பங்குச்சந்தையில் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Stock Market: Sensex declines for 2nd day, ends 539 pts lower; Nifty settles at 24,091
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.