FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் வீழ்ச்சி! (ஆக. 27)

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

49 வினாடிகள் முன்பு
பங்குச்சந்தை - IANS
பகிர்:

நேற்று பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்த நிலையில் இன்றும் (ஆக. 27, வியாழக்கிழமை) பங்குச்சந்தை வர்த்தகம் சரிவுடன் தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,576.76 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 273.45 புள்ளிகள் சரிந்து 77,199.49 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 65.30 புள்ளிகள் குறைந்து 24,142.45 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Advertisement

Advertisement

நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.36 சதவீதம் மற்றும் 031 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகின.

துறைவாரியாக, நிஃப்டி பொதுத்துறை வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, நுகர்வோர் பொருள்கள் ஆகியவை மோசமாகச் செயல்பட்டன. அதேசமயம், நிஃப்டி பார்மா, தனியார் வங்கி, நுகர்வோர் நீடித்த பொருட்கள், மருந்துத் துறை ஆகியவை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

30 சென்செக்ஸ் நிறுவனங்களில் ஹெச்டிஎல் டெக், ஹெச்டிஎப்சி, என்டிபிசி, மஹிந்திரா & மஹிந்திரா, பவர் கிரிட், டிசிஎஸ் ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன. கோடக் மஹிந்திரா வங்கி, டெக் மஹிந்திரா, பெல் ஆகிய நிறுவனங்கள் லாபம் பெற்றுள்ளன.

பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 87.45 டாலராக உள்ளது.

summary

Stock Market: Sensex down 200 pts, Nifty around 24,150

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments