FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

2-ம் நாளாக பங்குச்சந்தை சரிவு! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தகம் பற்றி...

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 11:31 am IST
பங்குச்சந்தை - IANS
பகிர்:

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் குறித்த நிச்சயமற்ற தன்மையால் நிஃப்டி 50, சென்செக்ஸ் குறியீடுகள் இன்று (ஆக. 12) சரிவைச் சந்தித்து வருகின்றன.

உலக பொருளாதாரச் சூழல், கச்சா எண்ணெய் விலை மாற்றம், வெளிநாட்டுப் பங்குகள் விற்பனை உள்ளிட்டவை காரணமாக பங்குச்சந்தையில் நாள்தோறும் மாற்றம் இருந்து வருகிறது.

இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

Advertisement

Advertisement

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 78,263.33 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.20 மணியளவில் சென்செக்ஸ் 534.21 புள்ளிகள் குறைந்து 77,620.04 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 163.60 புள்ளிகள் குறைந்து 24,308.10 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் 30 பங்குகளில் டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, எஸ்பிஐஎன், ஏசியன் பெயிண்ட்ஸ், எட்டர்னல், ஹெச்சிஎல் டெக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் மட்டும் உயர்ந்தும் மற்ற நிறுவனங்களின் பங்குகள் சரிந்தும் வருகின்றன.

நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.3, 0.21 சதவீதம் சரிந்து வர்த்தகமாகின்றன.

துறைசார் குறியீடுகளில், நிஃப்டி ஆட்டோ, மீடியா, உலோகம், பொதுத்துறை வங்கிகள் ஆகிய குறியீடுகள் மட்டும் உயர்ந்து வரும் நிலையில் ஐடி, எஃப்எம்சிஜி, நுகர்வோர் பொருள்கள் உள்ளிட்ட மற்ற குறியீடுகள் சரிந்து வருகின்றன.

வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.41 ஆக உள்ளது.

டாடா குழும தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா செய்துள்ளதால் டாடா நிறுவனப் பங்குகள் 3% வரை சரிந்துள்ளன.

summary

Stock Market: Sensex falls 500pts; Tata group shares slip 3 percent

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments