4 நாள் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தை ஏற்றம்! சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...
தொடர்ந்து 4 நாள்கள் சரிவுக்குப் பிறகு இந்திய பங்குச்சந்தைகள் இன்று (செப். 4) உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,657.02 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 673.15 புள்ளிகள் உயர்ந்து 76,826.58 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 113.80 புள்ளிகள் அதிகரித்து 23,987.25 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
Advertisement
Advertisement
நிஃப்டி50 குறியீட்டில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், ஹெச்டிஎப்சி லைஃப் இன்சூரன்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
சென்செக்ஸ் 30 பங்குகளில் ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, எட்டர்னல் ஆகிய நிறுவனங்கள் மட்டும் சரிந்தும் மற்ற நிறுவனங்கள் உயர்ந்தும் வர்த்தகமாகின்றன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.04 சதவீதம் சரிந்து, ஸ்மால்கேப் குறியீடு 0.46 சதவீதம் உயர்ந்தும் வர்த்தகமாகிறது.
துறைவாரியாக நிஃப்டி நிதி சேவைகள் அதிக லாபம் அடைந்த நிலையில் பெரும்பாலான குறியீடுகள் லாபம் பெற்றன. அதேநேரத்தில் நிஃப்டி ஆட்டோ, பார்மா, எப்எம்சிஜி குறியீடுகள் மட்டும் சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.
Stock Market: Sensex at days high, up 500 pts; Nifty tops 23,950
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.