FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பங்குச்சந்தை தொடர் வீழ்ச்சி: 400 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்; ஆட்டோ, ஐடி பங்குகள் சரிவு! (செப். 3)

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

3 செப்டம்பர் 2026, 4:16 pm IST
பங்குச்சந்தை - IANS
பகிர்:

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றன.

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக இன்று (செப். 3) சரிந்து நிறைவடைந்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,724.95 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 417.49 புள்ளிகள் சரிந்து 76,152.86 புள்ளிகளில் நிலை பெற்றது.

Advertisement

Advertisement

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 41 புள்ளிகள் குறைந்து 23,873.45 புள்ளிகளில் நிறைவடைந்தது.

நிஃப்டி 50 பங்குகளில் பஜாஜ் ஆட்டோ, டெக் மஹிந்திரா, டிரெண்ட் ஆகிய நிறுவனங்கள் அதிக சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 0.37 சதவீதம் மற்றும் 1.2 சதவீதம் உயர்ந்து முடிந்தன.

துறைவாரியாக, நிஃப்டி ரியல் எஸ்டேட் 2% வரை லாபம் பெற்றன. நிஃப்டி மீடியா, பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் ஆகிய குறியீடுகளும் லாபமடைந்தன. அதேநேரத்தில் ஆட்டோ, ஐடி, எப்எம்சிஜி, பார்மா பங்குகள் சரிந்தன.

30 சென்செக்ஸ் நிறுவனங்களில் ஆக்சிஸ் வங்கி, பெல், அதானி போர்ட்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பாரதி ஏர்டெல், ஹெச்டிஎப்சி வங்கி, டாடா ஸ்டீல் ஆகியவை மட்டும் லாபம் பெற்றும் மற்ற நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகமாகின.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 48 பைசா உயர்ந்து 94.49 டாலராகவுள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 97 டாலராக உயர்ந்துள்ளது.

summary

Stock Market: Sensex drops 417 pts; Nifty settles at 23,873

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments