FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

5 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை ஏற்றம்! சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு!

இன்றைய பங்குச்சந்தைகள் வர்த்தக நிலவரம் பற்றி...

Updated On : 27 ஜூலை 2026, 11:37 am IST
- IANS
பகிர்:

கடந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் வர்த்தகமான நிலையில் இன்று (ஜூலை 27) பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,608.98 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 700.05 புள்ளிகள் உயர்ந்து 76,759.82 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 197.15 புள்ளிகள் உயர்ந்து 23,965.45 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Advertisement

Advertisement

நிஃப்டி50 குறியீட்டில் இன்டர்குளோப் ஏவியேஷன், டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ், எடர்னல் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.

சென்செக்ஸ் 30 பங்குகளில் அனைத்தும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பவர் கிரிட் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை சரிவைச் சந்தித்த நிறுவனங்களாகும்.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.16, 1.08 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.

துறைவாரியாக நிஃப்டி ஐடி, மீடியா, ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்ந்து வருகின்றன.

summary

Stock Market: Sensex at day high, up 700 pts, Nifty above 23,950

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments