பங்குச்சந்தை: சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு! ஐடி, உலோகப் பங்குகள் சரிவு!
இன்றைய பங்குச்சந்தைகள் வர்த்தக நிலவரம் பற்றி...
2 நாள்கள் சரிவுக்குப் பிறகு பங்குச்சந்தைகள் இன்று (ஜூலை 15) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,192.76 என்ற புள்ளிகளில் தொடங்கியது.நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 503.49 புள்ளிகள் உயர்ந்து 77,558.43 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 135.45 புள்ளிகள் உயர்ந்து 24,187.50 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
Advertisement
Advertisement
சென்செக்ஸ் பங்குகளில், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, எடர்னல், இன்டர்குளோப் ஏவியேஷன், அல்ட்ராடெக் சிமெண்ட், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை அதிக லாபம் பெற்றன.
இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பவர் கிரிட் மற்றும் டெக் மஹிந்திரா ஆகியவை சரிவைச் சந்தித்த நிறுவனங்களாகும்.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.44 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 1.04 சதவீதம் உயர்ந்து வர்த்தகமாகிறது.
துறைவாரியாக நிஃப்டி கெமிக்கல், பொதுத்துறை வங்கிகள், நிதி சேவைகள் குறியீடுகள் உயர்ந்தும் ஐடி, உலோகப் பங்குகள் சரிந்தும் வருகின்றன.
stock market today: Sensex rises 500 pts, Nifty above 24,150
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.