முகப்பு
வணிகம்

ஜூன் 25: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிவு! ஐடி, மீடியா பங்குகள் சரிவு!

இன்றைய பங்குச்சந்தைகள் வர்த்தக நிலவரம் பற்றி...

Updated On : 25 ஜூன் 2026, 4:27 pm IST
பங்குச்சந்தை - IANS
பகிர்:

பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2-ம் நாளாக இன்றும்(ஜூன் 25) உயர்வுடன் நிறைவு பெற்றுள்ளன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,391.07 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலையில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் வரை உயர்ந்தது. வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 109.25 (0.14%) புள்ளிகள் உயர்ந்து 77,100.47 புள்ளிகளில் நிலைபெற்றது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 34.35 (0.14%) புள்ளிகள் உயர்ந்து 24,056 புள்ளிகளில் நிறைவு பெற்றது.

Advertisement

Advertisement

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.55 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.47 சதவீதம் சரிந்தது.

நிஃப்டி 50 பங்குகளில் ஓஎன்ஜிசி, பவர் கிரிட், ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்கள் நஷ்டமடைந்தன.

துறைவாரியாக நிஃப்டி ஐடி, மீடியா, உலோகம், எண்ணெய் & எரிவாயு, பார்மா குறியீடுகள் சரிந்தும் ஆட்டோ, நிதி சேவைகள், நுகர்வோர் பொருள்கள், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், ரியல் எஸ்டேட் குறியீடுகளின் பங்குகள் உயர்ந்தும் வருகின்றன.

சென்செக்ஸ் 30 பங்குகளில் இண்டிகோ, எம்&எம், டிசிஎஸ், மாருதி சுசுகி, ஹெச்சிஎல் டெக் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. பெல், பவர் கிரிட், டைட்டன், அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 73.10 டாலராக உள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94.40 ஆக உள்ளது.

summary

Sensex gains 109 points to settle at 77,100, Nifty up 34 points to 24,056

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments