முகப்பு
சென்னை

கிராமப்புற மெட்ரிக் பள்ளிகளுக்கு வரிவிலக்கு அளிக்கக் கோரிக்கை

கிராமப்புறங்களில் இயங்கி வரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு கட்டட வரி, சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Updated On : 2 ஜூன் 2013, 3:15 am IST
பகிர்:

கிராமப்புறங்களில் இயங்கி வரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு கட்டட வரி, சொத்து வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச இடவசதி விதியால் 1,500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. அந்தப் பள்ளிகளில் இருக்கும் இடவசதிக்கேற்ப மாணவர்கள் சேர்க்கையை நிóர்ணயம் செய்ய அரசு அனுமதியளிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

கிராமப்புற மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். மேலும் பள்ளி பஸ்களுக்கு உரிமம் புதுப்பிக்கும் விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.