முகப்பு
கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் புதிய சாதனை!

ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் இஷான் கிஷன் புதிய சாதனைப் படைத்துள்ளார்.

Updated On : 18 ஜூன் 2026, 10:01 pm IST
இஷான் கிஷன் - படம் | பிசிசிஐ (எக்ஸ்)
பகிர்:

ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் இஷான் கிஷன் புதிய சாதனைப் படைத்துள்ளார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (ஜூன் 17) லக்னௌவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 170 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி 403 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஆப்கானிஸ்தானுக்கு நிர்ணயிக்க, அந்த அணி 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் சதம் விளாசி அசத்தினர். ஷுப்மன் கில் 154 ரன்களும், இஷான் கிஷன் 125 ரன்களும் எடுத்தனர்.

Advertisement

Advertisement

குறைந்த பந்துகளில் 1000 ரன்களைக் கடந்து சாதனை!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் 125 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் குறைந்த பந்துகளில் 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள் வரிசையில் இஷான் கிஷன் இணைந்துள்ளார். அவர் 966 பந்துகளில் 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார்.

குறைந்த பந்துகளில் 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள்

ஹார்திக் பாண்டியா - 857 பந்துகளில்

கேதர் ஜாதவ் - 936 பந்துகளில்

கபில் தேவ் - 954 பந்துகளில்

ஷுப்மன் கில் - 954 பந்துகளில்

எம்.எஸ்.தோனி - 955 பந்துகளில்

இஷான் கிஷன் - 966 பந்துகளில்

இந்திய அணிக்காக இதுவரை 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இஷான் கிஷன் 1092 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Indian player Ishan Kishan has set a new record in One Day Internationals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.