முகப்பு
கிரிக்கெட்

இங்கிலாந்து ஆடுகளங்களுக்கு ஏற்றவாறு இந்திய அணி விளையாட வேண்டும்: இஷான் கிஷன்

இங்கிலாந்து ஆடுகளங்களுக்கு ஏற்றவாறு இந்திய அணி விளையாட வேண்டும் என இந்திய அணி வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

Updated On : 5 ஜூலை 2026, 6:23 pm IST
இஷான் கிஷன் - படம் | AP
பகிர்:

இங்கிலாந்து ஆடுகளங்களுக்கு ஏற்றவாறு இந்திய அணி விளையாட வேண்டும் என இந்திய அணி வீரர் இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டி20 போட்டி மான்செஸ்டரில் நேற்று (ஜூலை 4) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. மேலும், 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றது.

இந்த நிலையில், இங்கிலாந்து ஆடுகளங்களுக்கு ஏற்றவாறு இந்திய அணி விளையாடி கூடுதலாக ரன்கள் குவிக்க வேண்டும் என இஷான் கிஷன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆடுகளங்களின் தன்மை எப்படி இருக்கும் என்பது எங்களைக் காட்டிலும் இங்கிலாந்து அணிக்கு மிகவும் நன்றாகத் தெரியும். பந்துவீச்சாளர்களை எப்படி பயன்படுத்த வேண்டும், பேட்டர்களை எங்கு களமிறக்க வேண்டும் என்பதெல்லாம் எங்களைக் காட்டிலும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், நாங்கள் எங்களது ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

இங்கிலாந்து அணி எங்களுக்கு எதிராக எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள நினைக்கிறோம். ஏனெனில், இங்கிலாந்து ஆடுகளங்களின் தன்மை குறித்து அவர்களுக்கு நிறைய யோசனைகள் இருக்கும். ஒவ்வொரு பேட்டரும் போட்டி குறித்த புரிதலை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் கூடுதலாக 20 ரன்கள் எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆட்டத்தின் சூழலை புரிந்துகொண்டு இனிவரும் போட்டிகளில் மேலும் சிறப்பாக செயல்படுவோம் என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி பவர் பிளேவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 65 ரன்கள் எடுத்தது. இருப்பினும், மிடில் ஓவர்களில் இந்திய அணியால் ரன்கள் குவிக்க முடியவில்லை. 7 முதல் 10 ஓவர்களில் வெறும் 32 ரன்களும், 14 முதல் 17 ஓவர்களில் வெறும் 24 ரன்களும் இந்திய அணி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

summary

Indian player Ishan Kishan has stated that the Indian team needs to play in a manner suited to English pitches.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments