முகப்பு
சென்னை

திருமுறை இசை ஆராதனை விழா நாளை தொடக்கம்

திருமுறை இசை ஆராதனை விழா சென்னையில் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On : 2 ஜூன் 2013, 3:32 am IST
பகிர்:

திருமுறை இசை ஆராதனை விழா சென்னையில் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறுகிறது.

அரனருள் சார்பில் பத்தாம் ஆண்டு திருமுறை இசை ஆராதனை விழா பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றம் தமிழிசைச் சங்கம் வளாகத்தில் ஜூன் 3-ஆம் தேதி தொடங்கி ஜூன் 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இவ்விழா நாள்களில் காலையில் திருமுறைத் தலங்களைப் பற்றிய திருமுறை இசை தொடர் நிகழ்ச்சியும், தொடர்ந்து வேத சிவாகம புராண இதிகாச தோத்திர சாஸ்திர சைவ சமயக் கருத்தரங்கம், மடாதிபதிகளின் ஆசி உரைகளும், மாலை வேளையில் திருமுறை இசை அரங்கம், திருவிளையாடல் புராணம் தொடர் விரிவுரையும் நடைபெறுகின்றன.

Advertisement

Advertisement

ஜூன் 3-ஆம் தேதி தொடக்க விழாவில் காஞ்சி மடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு விருதும், பொற்கிழியும் அளித்து ஆசி வழங்குகிறார்.

முன்பாக அரனருள் சார்பில் ஜூன் 2-ஆம் தேதி மயிலாப்பூர் கபாலீசுவரர் ஆலயத்தில் கூட்டு வழிபாடு நடைபெறுகிறது.

இது குறித்த மேலும் தகவல்களுக்கு 94441-56335 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.