முகப்பு
சென்னை

திருவொற்றியூரில் இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம்

திருவொற்றியூரில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) நடைபெறுகிறது.

Updated On : 2 ஜூன், 2013 at 3:15 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:12 PM

திருவொற்றியூரில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) நடைபெறுகிறது.

இது குறித்து மு.க.ஸ்டாலின் நற்சேவை மையத்தின் தலைவர் ஆதி குருசாமி கூறியது:

சேவை மையத்தின் சார்பில் நடத்தப்பட உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாம் திருவொற்றியூர் கிளாஸ் பேக்டரி சாலையில் (அண்ணாமலைநகர் ரயில்வே கேட் அருகே) உள்ள அனைத்து வியாபாரிகள் சங்க அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெற உள்ளது.

Advertisement

இதில் பெப்சி, யுனிவர்சல், எம்.டி.எஸ்., ஐடியா, யுனிவர்சல், டி.எச்.எல். கூரியர்ஸ், வில்ஸ் லைப்ஸ்டைல், ஸ்மித், கோத்ரெஜ், பரான் ஜூஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான ஊழியர்களைத் தேர்வு செய்ய உள்ளன.

இதில் எட்டாம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் டூ, டிப்ளமோ, பட்ட வகுப்பு படித்தவர்கள் அனைவரும் பங்கு பெறலாம்.

சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என நிறுவனங்கள் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றார் ஆதிகுருசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.