முகப்பு
சென்னை

பல் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை முறையாக நடைபெற உத்தரவிடக் கோரி வழக்கு

முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விதிமுறைகளின்படி முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்திட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Updated On : 2 ஜூன் 2013, 3:33 am IST
பகிர்:

முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை விதிமுறைகளின்படி முறையாக நடைபெறுவதை உறுதிப்படுத்திட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய பல் மருத்துவர்கள் சங்கத்தின் கெüரவச் செயலாளர் டாக்டர் வி.முரளி பொது நல மனு தாக்கல் செய்துள்ளார். முதுநிலை பல் மருத்துவப் படிப்புகளுக்காக மாணவர்களிடையே போட்டித் தேர்வு நடத்தி, தகுதியான மாணவர்களையே படிப்பில் சேர்க்க வேண்டும். தற்போது முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால் விதிமுறைகளை மீறியும், சட்ட விரோதமாகவும் பல தனியார் நிறுவனங்கள் மாணவர்களைச் சேர்த்து வருகின்றன. மாணவர் சேர்க்கை வெளிப்படையாக நடைபெறவில்லை. இதன் காரணமாக தகுதியுள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே விதிமுறைகளின்படியும், தகுதியான மாணவர்களைக் கொண்டு மட்டுமே முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதை அரசு உறுதி செய்தாக வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் முரளி கோரியுள்ளார்.

Advertisement

Advertisement

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.கருப்பையா ஆகியோரைக் கொண்ட கோடை கால அமர்வு முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.