முகப்பு
சென்னை

நான்கு நீதிபதிகள் பணி இடமாற்றம்

சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான 2-ஆவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.பி.இளங்கோ நீலகிரி மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Updated On : 12 செப்டம்பர் 2013, 1:57 am IST
பகிர்:

சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான 2-ஆவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.பி.இளங்கோ நீலகிரி மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பி.கலையரசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சி. திருமகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஆர்.கமலாவதி தூத்துக்குடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதியாகவும், வேலூர் மாவட்ட கூடுதல் நீதிபதி கே.ஹெச்.இளவழகன் மதுரை மாவட்ட 5-ஆவது கூடுதல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.