மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு
கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
மாநிலச் செயலகமான 'நபன்னா' வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அதேசமயம் சந்திப்பு குறித்த விரிவான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
எனினும், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் விவாதித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இதனிடையே ரிசர்வ் வங்கி ஆளுநருடனான சந்திப்பு குறித்த புகைப்படங்களை சுவேந்து அதிகாரி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் அண்மையில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் 208 தொகுதிகளில் வெற்றிபெற்று, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்தது.
அதைத்தொடர்ந்து மாநிலத்தின் முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Reserve Bank of India (RBI) Governor Sanjay Malhotra on Saturday met West Bengal Chief Minister Suvendu Adhikari.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.