முகப்பு
சென்னை

19 இடங்களில் மரங்கள் விழுந்தன

சென்னையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பெய்த கனமழையின் காரணமாக 19 இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்தன.

Updated On : 12 செப்டம்பர் 2013, 4:47 am IST
பகிர்:

சென்னையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பெய்த கனமழையின் காரணமாக 19 இடங்களில் மரங்கள் சாலையில் விழுந்தன.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை காலை வரை விடிய விடிய மழை பெய்தது. இதனால் சென்னை முழுவதும் பல இடங்களில் 19 இடங்களில் மரங்கள் மற்றும் கிளைகள் சாலையில் விழுந்தன. இதனால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மரங்களை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.

ராயபுரம் சூரிய நாராயணன் சாலை, எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலை, புளியந்தோப்பு ஸ்டீபன்சன் சாலை, கீழ்ப்பாக்கம் லட்சுமிபதி சாலை, சுப்பிரமணி தெரு, வில்லிவாக்கம் சிவன் கோயில் மேற்கு மாட வீதி, ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனி, நந்தனம் லோட்டஸ் காலனி, அசோக் நகர், அண்ணா பிரதான சாலை, கே.கே. நகர் பாரதிதாசன் காலனி, பி.டி. ராஜன் சாலை, கோடம்பாக்கம் அக்பராபாத் 2-வது தெரு, எம்.ஆர்.சி. நகர் வசந்த அவென்யு, ரோகிணி கார்டன், கோட்டூர்புரம் நாயுடு தெரு, 16-ஆவது அவென்யு இந்திரா நகர், திருவான்மியூர் தெற்கு அவென்யு, 4-வது சி வார்டு சாலை ஆகிய பகுதிகளில் மரங்கள் விழுந்தன.

Advertisement

Advertisement

அண்ணாநகர் 13-வது பிரதான சாலையில் மரக்கிளை சாலையில் விழுந்தது. இவை அனைத்தும் மாநகராட்சி பணியாளர்களால் உடனடியாக அகற்றப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.