முகப்பு
தமிழ்நாடு

தில்லியில் முதல்வர் விஜய்க்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை!

தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் முதல்வர் விஜய்...

Updated On : 10 ஜூன் 2026, 2:17 pm IST
தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார் முதல்வர் விஜய்... - DIPR
பகிர்:

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தில்லி சென்றுள்ள முதல்வர் விஜய்க்கு தமிழ்நாடு இல்லத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வரான பிறகு முதல்முறையாக கடந்த மே 27-ஆம் தேதி முதல்வா் ஜோசப் விஜய், தில்லி சென்று பிரதமா் மோடியை சந்தித்தாா். அப்போது, கா்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேக்கேதாட்டு அணை திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்றும், தமிழக மீனவா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினாா்.

இந்த பயணத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களை விஜய் நேரில் சந்திப்பார் என்று கூறப்பட்ட நிலையில், அவர்கள் யாரையும் சந்திக்காமல் சென்னை திரும்பினார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், மாநில முன்னேற்றத்துக்குத் தேவையான வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு குறித்து அனைத்து மாநில முதல்வா்களுடன் தில்லியில் நாளை, ஜூன் 11-ஆம் தேதி நீதி ஆயோக் கூட்டம் பிரதமா் மோடி தலைமையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க முதல்வா் ஜோசப் விஜய் இன்று(புதன்கிழமை) தில்லி புறப்பட்டுச் சென்றார். அவருக்கு தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார்.

அடுத்த இரு நாள்கள் தில்லியில் முகாமிடும் முதல்வர் விஜய், உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களை நேரில் சந்திப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

CM vijay reached delhi to attend niti aayog meeting

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.