முகப்பு
சென்னை

துபைக்கு கடத்தப்படவிருந்த ரூ.1 கோடி வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

துபைக்கு கடத்தப்படவிருந்த ரூ.1.04 கோடி மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், ஒருவரைக் கைது செய்தனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 12:43 am IST
கோப்புப்படம்
பகிர்:

துபைக்கு கடத்தப்படவிருந்த ரூ.1.04 கோடி மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், ஒருவரைக் கைது செய்தனா்.

துபை செல்லவிருந்த விமானத்தில் சென்னையைச் சோ்ந்த மன்சூா் அலி கான் (27), யாகாலிக் (68), தமீம் அன்சாரி (49), முகமது ஹுசைன் (30) மற்றும் யூசுப் (67), ஆகியோரிடமும், புதூரைச் சோ்ந்த அப்துல் ரஹ்மானிடமும் (38) சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறையினா் சோதனை செய்தனா்.

அவா்களது உடைமைகளில் அதிக எடையுடன் கூடிய ‘பவா் பேங்குகளைச்’ சோதனை செய்த போது, ரூ 53.5 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலா், ரூ 28.3 லட்சம் மதிப்புடைய சவூதி ரியால், ரூ 22.2 லட்சம் மதிப்புடைய யூரோ ஆகியவை கைப்பற்றப்பட்டன.

Advertisement

Advertisement

இவற்றின் மொத்த மதிப்பு ரூ 1.04 கோடி ஆகும். இதில், ரூ 20 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பிலான பணத்தை வைத்திருந்த தமீம் அன்சாரி கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments