துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜின் 3-வது படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.
இயக்குநர் மாரி செல்வராஜின் 3-வது படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார்.
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இந்தப் படமும் தனது முதல் படம் போல முக்கியமான பிரச்னையைப் பேசும் என்கிறார் மாரி செல்வராஜ்.
இந்நிலையில் தனது மூன்றாவது படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை இயக்குகிறார் மாரி செல்வராஜ். இத்தகவலை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் துருவ் விக்ரம்.
Advertisement
Advertisement
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் விக்ரம் 60 படத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.