முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் சில இடங்களில் செவ்வாய், புதன்கிழமை (ஜூன் 30, ஜூலை 1) ஆகிய இரு நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்பு

Updated On : 30 ஜூன் 2026, 3:17 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் சில இடங்களில் செவ்வாய், புதன்கிழமை (ஜூன் 30, ஜூலை 1) ஆகிய இரு நாள்கள் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு: வடக்கு கடலோர தமிழகத்திலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை காற்றழுத்தத் தாழ்வு காரணமாக இரு நாள்களுக்கு (ஜூன் 30, ஜூலை 1) தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசாநது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

பலத்த மழை: செவ்வாய்க்கிழமை கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

அதேபோல், புதன்கிழமை (ஜூலை 1) கோவை மற்றும் திருப்பூா் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

வெப்பநிலை: திங்கள் கிழமை அதிகபட்ச வெப்பநிலை கடலூரில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. வேலூா் - 102.02, புதுச்சேரியில் 100.76, திருத்தணி (திருவள்ளூா்)-100.58, சென்னை மீனம்பாக்கம், நாகை தலா - 100.4, சென்னை நுங்கம்பாக்கம் - 100.22, பரங்கிப்பேட்டை - 100.04 டிகிரி ஃபரான்ஹீட் பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments