முகப்பு
செய்திகள்

‘பரியேறும் பெருமாள்’ நாயகிக்கு திடீர் திருமணம்

‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு வியாழனன்று திடீர் திருமணம் நடைபெற்றுள்ளது.  

Updated On : 7 ஜனவரி 2021, 7:41 pm IST
‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு வியாழனன்று திடீர் திருமணம் நடைபெற்றுள்ளது.
பகிர்:

சென்னை: ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு வியாழனன்று திடீர் திருமணம் நடைபெற்றுள்ளது.  

தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான 'கயல்' படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. இதனால் அதற்குப் பிறகு அவரை பலரும் 'கயல்' ஆனந்தி என்றே அவரை அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து 'சண்டி வீரன்', 'த்ரிஷா இல்லனா நயன்தாரா', 'விசாரணை', 'ரூபாய்', 'என் ஆளோட செருப்பக் காணோம்', 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு' உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு வியாழனன்று திடீர் திருமணம் நடைபெற்றுள்ளது.  

Advertisement

ஆந்திராவின் வாராங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருடன் இவருக்கு திருமணம் நடைபெற உள்ளது. இது பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும். இன்று (ஜனவரி 7) இரவு 8 மணியளவில்

வாராங்கல் பகுதியில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் இந்த திருமணம் நடைபெறுகிறது.

கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஆனந்திக்கு நெருங்கிய குடும்ப நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.