சினிமா

கண்ணோட்டம் 2016 - தமிழ் சினிமா

DIN

ஜனவரி
1    மத்திய தணிக்கை குழு செயல்படுவதை கண்காணிக்க ஷியாம் பெனகல்   தலைமையில் மத்திய தணிக்கை குழு அமைப்பு. பின்னர் கமல்ஹாசன் உள்ளிட்ட சிலர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டனர்.  
23    நடிகை அர்ச்சனாகவி - அபிஸ்மேத்யூ திருமணம்.
28    நடிகர் நகுல் - ஸ்ருதி பாஸ்கர் திருமணம் நடைபெற்றது. 
ஏப்ரல்
11    கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு படமாகி வருகிறது.  ஜேம்ஸ் எர்ஸ்கைன் இயக்கும் இந்தப் படத்தில் சச்சினாக நடிக்க இருப்பது சச்சினேதான்.   சிறுவயது சச்சின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது அவரது மகன் அர்ஜீன். 
 ஜூன்
5    பின்னணி பாடகர் பென்னி தயாள் - கேத்ரீன் திருமணம்.
 ஜூலை
14    தனது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தின் மாடிப் படியில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த கமல்ஹாசனுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 
22    பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நடிகை ராதிகா ஆப்தே நடித்து வெளியான கபாலி படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்தது.
ஆகஸ்ட்
6    காதல் மணம் புரிந்து கொண்ட இயக்குநர் விஜய் - நடிகை அமலாபால் இருவரும் விவகாரத்து பெற்றனர். 
செப்டம்பர்
16    இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிஸி இருவரும் விவகாரத்து பெற்றனர். 
22    இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களில் தமிழ் படமான விசாரணை இடம் பிடித்தது. பல ஆண்டு இடைவெளிக்குப் பின் ஆஸ்கருக்கு சென்ற தமிழ்ப் படம் இது. 
23    எம்.எஸ்.தோனி - தி அன் டோல்ட் ஸ்டோரி  திரைப்படம்  தமிழில் வெளியாவதை முன்னிட்டு சென்னை வந்திருந்த கிரிக்கெட் வீரர் தோனி, படத்தில் நடித்த நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்தார்.
நவம்பர்
1    சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக நட்பு பாராட்டி ஒன்றாக வாழ்ந்து வந்த கமல்ஹாசன் - கௌதமி பிரிந்தனர். 
7    கன்னட பட படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் நடிகர்கள் அனில் மற்றும் உதய் இருவரும் விபத்துக்குள்ளாகி இறந்தனர். 
14    தயாரிப்பாளர் சங்கம் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்த நடிகர் விஷால் அச்சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார். 
25    நடிகை காவ்யாமாதவன் - நடிகர் திலீப் திருமணம். 
27    ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நடிகர்கள் சரத்குமார், ராதாரவி இருவரையும் நீக்கி நடிகர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
டிசம்பர்
23    ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா விவகாரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT