பெர்லின் திரைப்பட விழாவில் புஷ்பா: ஜெர்மனி புறப்பட்ட அல்லு அர்ஜுன்!
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.
சுகுமார் இயக்கிய அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2021இல் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதிலும் புஷ்பா படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது. சமந்தாவின் 'ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டி தொட்டியெங்கும் அதிர்ந்தது குறிப்பிடத்தக்கது.
புஷ்பா - 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. வில்லனாக நடிக்கும் ஃபகத் ஃபாசிலுக்கான படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
புஷ்பா படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டதும். படக்குழு புஷ்பா - 2 திரைப்படம் இந்தாண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பெர்லின் திரைப்பட விழாவில் புஷ்பா படம் திரையிடப்படவிருக்கிறது. இன்று (பிப்.15) தொடங்கி பிப்.24ஆம் தேதி வரை இந்த திரைப்பட விழா நடக்கவிருக்கிறது. அதற்காக நடிகர் அல்லு அர்ஜுன் ஜெர்மனி கிளம்பியிருக்கிறார். ஜெர்மனியில் வெளிநாட்டு இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், செய்தியாளர்களை சந்திக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அப்டேட் இல்லாமல் காத்திருந்த அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த செய்தி பரவி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.