FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

கேன்ஸ் விழாவில் தமிழ் அழகி...

'சிறு வயதில் மாடலிங் துறையில் ஈடுபட விரும்பினேன். ஆனால், தமிழ்க் குடும்பத்தில் வளர்ந்ததால், அந்த எண்ணம் நிராகரிக்கப்பட்டது.

Updated On : 7 ஜூன் 2026, 4:04 am IST
பகிர்:

'சிறு வயதில் மாடலிங் துறையில் ஈடுபட விரும்பினேன். ஆனால், தமிழ்க் குடும்பத்தில் வளர்ந்ததால், அந்த எண்ணம் நிராகரிக்கப்பட்டது. பிறகு, ஒப்பனை மீதான ஈர்ப்பு, விளம்பரத் துறையில் எனது வேலையுடன் இணைந்து, அழகு சார்ந்த உள்ளடக்கங்களை உருவாக்கத் தூண்டியது. என்னை அதிகமாக வெளிப்படுத்திக் கொள்ள முனைந்தேன்.

அது மாடலிங்குக்கு மீண்டும் கைகோர்த்து அழைத்துச் சென்றது. மாடலிங் இப்போது முழுநேர வேலையாக மாறிவிட்டது'' என்று கூறும் தபிதா மேரி, அண்மையில் 79-ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டவர்களையும், திரைப்பட விழாவை உலகம் எங்கும் தொலைக்காட்சிகளில் பார்த்த பார்வையாளர்களின் கவனங்களையும் ஈர்த்த அழகியாவார்.

ஜெர்மனியில் வசித்து வரும் தமிழ் வம்சாவளியான அவர், சமூக வலைதளங்களுக்காக ரீல்கள் தயாரிக்கும் உள்ளடக்கங்களை உருவாக்குபவராகவும் இயங்குகிறார். இந்தச் செய்தி வெளி வந்ததும் தபிதா மேரி குறித்த கூடுதல் தகவல்களுக்காக இணையத்தில் கூகுள் செய்து பார்க்க நெட்டிசன்கள் ஆரம்பித்துவிட்டனர்.

Advertisement

Advertisement

கேன்ஸ் விழாவில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் அழகி பங்கு பெறுவது இதுதான் முதல் முறை. ஃபேஷன் அடையாளமாக, சிவப்புக் கம்பளத்தில் தபிதா அறிமுகமானது இணையத்தில் வைரலானதுடன், 'ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வரும்' என்று ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

இங்கிலாந்து - வங்கதேச ஆடை நிறுவனமான 'கானம்ஸின்' வடிவமைத்த 'மெட்டாலிக்-சில்வர்' கவுனை அணிந்து வந்த தபிதா, அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு, அழகுக்கான வரையறைகளை மறுவரையறை செய்வது குறித்த உரையாடல்களையும் முன்வைத்தார்.

கிரேக்க பாணியில் அமைந்த, ஒரு தோள்பட்டை கொண்ட அந்த மின்னும் கவுனில் முத்துகள் பதிக்கப்பட்டிருந்தன. தபிதா சிவப்புக் கம்பளத்தில் கேட் வாக் வந்த போது கவுன் நேர்த்தியாக அசைந்தாடியது, கேன்ஸ் அழகிகளையும் கவர்ந்தது.

இணையத்தில் உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது தபிதாவின் ஆடை மட்டுமல்ல; தபிதாவின் கருமை நிற அழகும்தான்! அதிகப்படியான அலங்காரங்களைத் தவிர்த்து, நேர்த்தியாக வந்ததும் பெரும்பாலானவர்களைக் கவர்ந்தது.

தனது இளமைப் பருவத்தில் நிறப் பாகுபாட்டை தபிதா ஜெர்மனியில் எதிர்கொண்டதாக வெளிப்படுத்தியிருந்தார். அதனால், பார்வையாளர்களின் அனுதாபமும் தபிதாவுக்கு பாராட்டுகளாக மாறிவிட்டன. தபிதா லண்டனுக்குக் குடிபெயர்ந்தது, நிறப் பாகுபாட்டினை முற்றிலும் மாற்றிவிட்டது.

கேன்ஸ் விழாவில் தனது முதல் அறிமுகத்துக்குப் பிறகு தபிதா மேரி சொன்னது:

'கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கு பெற்ற நாள்... என் வாழ்வில் அற்புதமான நாள். இந்த நம்பமுடியாத வாய்ப்பை வழங்கிய 'மெட்டா' குழுவுக்கு நன்றி. உண்மையிலேயே இந்த நாளை மிகவும் மதிக்கிறேன்.''

தபிதா இன்று, ஒரு ஃபேஷன் படைப்பாளியாக மட்டுமல்லாமல், உலகளாவிய அளவில் தமிழ், தெற்காசியச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்துக்கான ஓர் அடையாளமாகவும் மாறியிருக்கிறார்.

கருப்பு நிறம் மேலை நாடுகளில் வெறுக்கப்படுவதில்லை. ஒதுக்கப்படுவதில்லை. இந்த மனநிலை தபிதாவுக்கு ஆதரவாக அமைந்துள்ளது. 2026 கேன்ஸ் விழாவில் தனது முதல் அறிமுகத்தின் மூலம், சர்வதேச அரங்கில் அழகு, ஃபேஷன் உலகில் வளர்ந்து வரும் முகங்களில் ஒருவராக தபிதா மேரி தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments