FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

டொரண்டோ திரைப்பட விழாவில் பாராட்டைப் பெற்ற டோரதி!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி படம் டொரண்டோ திரைப்பட விழாவில் வரவேற்பைப் பெற்றது குறித்து...

12 செப்டம்பர் 2026, 11:53 am IST
டோரதி படத்தின் காட்சி. - படம்: யூடியூப் / ஜியோ ஸ்டூடியோஸ்
பகிர்:

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய டோரதி திரைப்படம் டொரண்டோ திரைப்பட விழாவில் பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

டோரதி திரைப்படம் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. 1980-களில் நடக்கும் கதையாக உருவான இதில் நட்பு, காதலுடன் அழுத்தமான படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் ரிஷிகாந்த், சனத், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

இப்படத்தில் இடம்பெற்ற கல்யாண விருந்து, முத்துமணி ஆகிய பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்பாடல்களால் இன்றைய இளைஞர்களும் இசையும் வரியும் சுத்தமாக இருக்கிறது என இளையராஜாவைப் பாராட்டி வருகின்றனர்.

இப்படத்தை டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அதற்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர்கள் ரிஷிகாந்த், சனத், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் டொரண்டோ சென்றிருந்தனர்.

இந்தப் படம் வருகிற செப். 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், டொரண்டோவில் படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி படக்குழுவுக்கு உற்சாகத்தை அளித்துள்ளார்கள்.

summary

Dorothy had a memorable premiere at TIFF 2026 A heartfelt standing ovation from the audience

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments