முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

மீண்டும் இணைந்த ஜோடி

சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'பிளாஸ்ட்'.

Updated On : 24 மே 2026, 4:20 am IST
பகிர்:

சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'பிளாஸ்ட்'. கராத்தே கலையை மையப்படுத்தி இப்படத்தின் கதைக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படம் மே 28-ஆம் தேதி திரையரங்கு

களில் வெளியாகவுள்ள நிலையில், இதன் விளம்பர நிகழ்வு சென்னையில் அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அபிராமி, 'நான் இந்தக் கதையைக் கேட்டவுடன் நடிக்க யோசித்தேன். இந்த மாதிரியான சண்டைக்காட்சியில் நடிக்க முடியுமா என்று சந்தேகப்பட்டேன். ஆனால், இயக்குநர் எனக்கு உற்சாகம் கொடுத்தார். அவர் அம்மாவும் கராத்தேயில் பிளாக் பெல்ட் என்றார்.

Advertisement

Advertisement

'வானவில்' படத்துக்குப் பின் 25 ஆண்டுகள் கழித்து இதில் அர்ஜுனுடன் ஜோடியாக நடித்திருக்கிறேன். ஏன் இத்தனை நாள்கள் நாங்கள் ஜோடி சேரவில்லை என்று புரியவில்லை. இருந்தாலும், இந்தமுறை நடந்திருப்பது மகிழ்ச்சி. எனக்கும் வயலன்ஸூக்கும் சம்பந்தமே கிடையாது. காமெடி, ஹாரர், ரொமான்ஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், இது போன்ற ஆக்ஷன் படத்தில் நடிக்க ஒரு பதற்றம் இருந்தது. எனக்குள் இருந்த பயத்தைப் போக்கிய அர்ஜுன் சாருக்கு நன்றி.

சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறேன். அதற்குக் காரணம் சண்டைப் பயிற்சியாளரும், சண்டைக்கலைஞர்களும்தான். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு கராத்தே சொல்லிக் கொடுத்த மாஸ்டருக்கு நன்றி. அவர்களுக்கு அடிபட்டாலும், எனக்கு உற்சாகம் கொடுத்து சிறப்பாக நடிக்க வைத்தார்கள். இந்தப் படம் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமையும்' என்று பேசியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.