அன்பில் அவன்
அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள புதிய படத்துக்கு 'அன்பில் அவன்' என்று பெயரிடப்பட்டு டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது.
அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள புதிய படத்துக்கு 'அன்பில் அவன்' என்று பெயரிடப்பட்டு டைட்டில் டீசர் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் ராஜா, இந்தப் படத்தின் கதையை எழுதி இருக்கிறார். அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இது குறித்துப் பேசிய அவர், 'என்னுடைய படம் வெளியாகி, கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் ஆகிவிட்டன. 'என்ன சார் படமே நடிக்கிறது இல்லையா?' என்று முதலில் பார்க்கிறவர்கள் கேட்டார்கள். பிறகு நண்பர்கள் கேட்டார்கள். அதன் பிறகு வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் கேட்டார்கள். ஒரு கட்டத்தில் கண்ணாடியைப் பார்த்து, 'எப்போடா படம் வரும்?' என்று என்னை நானே கேட்க ஆரம்பித்துவிட்டேன். ஒவ்வொரு படமும் அதற்கான நேரத்தை எடுத்துக்கொள்ளும். ஏதோ ஒரு வெள்ளிக்
கிழமை படம் வெளியாக வேண்டும் என்று நினைக்கின்ற ஆள் நான் இல்லை' எனப் பேசியிருக்கிறார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.