FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கதாநாயகியைக் கொல்லாதீர்கள்; அன்பில் முறுக்கு..! ரசிகர்களின் கமெண்ட்ஸுக்கு அசோக் செல்வன் - ப்ரீத்தி முகுந்தன் பதில்!

அன்பில் அவன் படக்குழு பகிர்ந்த விடியோ வைரலாகி வருவது குறித்து...

40 வினாடிகள் முன்பு
ரசிகர்களின் கமெண்ட்ஸுக்கு பதில் அளிக்கும் அசோக் செல்வன் - ப்ரீத்தி முகுந்தன் - படம்: ஐயங்காரன் இன்டர்நேஷனல்
பகிர்:

அன்பில் அவன் படத்தில் டிரைலருக்குக் கிடைத்த ரசிகர்களின் கமெண்ட்ஸுக்கு அசோக் செல்வன் - ப்ரீத்தி முகுந்தன் பதில் அளித்துள்ள விடியோ வைரலாகி வருகிறது.

அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் ‘அன்பில் அவன்’ என்ற புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.

ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுத, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

Advertisement

Advertisement

2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு அசோக் செல்வன் நாயகனாக நடித்து எந்தத் திரைப்படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில், அன்பில் அவன் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அன்பில் அவன் திரைப்படம் வருகிற செப்.25 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், ரசிகர்களின் கமெண்ட்ஸுக்கு அசோக் செல்வன் - ப்ரீத்தி முகுந்தன் பதில் அளித்துள்ள விடியோ வைரலாகி வருகிறது.

பிரீத்தி முகுந்தன் அடுத்த ஐஸ்வர்யா ராய் என்ற கமெண்ட்டுக்கு அசோக் செல்வன் ‘வாவ்’ என்பார். இதற்குப் பதிலளித்த பிரீத்தி முகுந்தன் அந்த கமெண்ட்டுக்கு அங்கேயே ஒருவர், “நானும் ப்ரீத்தி ரசிகன்தான்டா; ஆனா எனக்கே கோபம் வருகிறது” எனக் கூறியுள்ளார்.

அடுத்ததாக பல்வேறு கமெண்ட்ஸ்களில் நாயகி படத்தில் இறந்துவிடுவாரா? தயவுசெய்து கொலை பண்ணிடாதீங்கடா என்று இருந்தன. இதனைப் படித்த அசோக் செல்வன், “அதற்கு நாங்கள் பொறுப்பல்ல” என்பார்.

”எவ்வளவு தைரியம் இருந்தால் மீசையை முறுக்கு 2 உடன் மோதுவீர்கள்?” என்ற கமெண்ட்டுக்கு, அசோக் செல்வன், “தைரியம் எல்லாம் இல்லை. வேறு தேதி கிடைக்கவில்லை. எதிராக வெளியாகவில்லை. அதனுடன் சேர்ந்து வெளியாகிறோம். இருவரது படத்தையும் பார்க்கலாம். அன்பில் அவன் + மீசையை முறுக்கு - அன்பில் முறுக்கு” என்பார். இது கவனம் பெற்று வருகிறது.

summary

Preity Mukhundhan died in anbil avan movie? Ashok Selvan and Preethi Mukundan respond to fans' comments!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments