5 நாள்களில் புஷ்பா-2 ஒட்டுமொத்த வசூலையும் முறியடித்த துரந்தர் 2!
8 நாள்களில் புஷ்பா-2 ஒட்டுமொத்த வசூலை முறியடித்த துரந்தர் படத்தைப் பற்றி...
ரன்வீர் சிங்கின் துரந்தர்: தி ரிவென்ஞ்ச் திரைப்படம் வெறும் 5 நாள்களில் புஷ்பா 2 படத்தின் (ஹிந்தி) ஒட்டுமொத்த வசூலையும் முறியடித்து அசத்தியுள்ளது.
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்த துரந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான துரந்தர்: தி ரிவென்ஞ்ச் மார்ச் 19 ஆம் தேதி வெளியானது. ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜூன், அக்ஷய் கன்னா, சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.
முதல் பாகம் ஹிந்தியில் மட்டும் வெளியாகி ரூ. 1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்த நிலையில், இரண்டாம் பாகம் நேரடியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் படத்துக்கான சிறப்புக் காட்சிகள் வெளியிடப்பட்டன. இருப்பினும் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், படத்தின் வசூல் சற்று தளர்ந்த நிலையில், மீண்டும் படத்தில் வசூல் உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், துரந்தர்: தி ரிவென்ஞ்ச் படம் நேற்று வசூலித்த ரூ. 65 கோடியுடன் சேர்த்து மொத்தமாக ஹிந்தியில் மட்டும் ரூ. 519.12 வசூலீட்டியுள்ளது.
இதன்மூலம், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 ஹிந்தி வெளியீட்டில் ஒட்டுமொத்த வசூலையும் வெறும் 5 நாள்களில் முறியடித்துள்ளது. மேலும், இதுவரை மொத்தமாக ரூ. 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியகியுள்ளன. இந்தப் படம் இந்திய அளவில், ரூ. 620 கோடியும், உலகளவில் ரூ. 830 கோடியும் வசூலித்துள்ளது.