செய்திகள்

வீரப்பனைப் பிடித்த விஜயகுமார் வேடத்தில் நடிக்க விருப்பம்: அக்‌ஷய் குமார்

DIN

சந்தனக் கடத்தல் வீரப்பன் 2004-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே தமிழக அதிரடிப்படை போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அதிரடிப்படைத் தலைவராக இருந்த விஜயகுமார், சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் குறித்து, வீரப்பன் - சேசிங் த பிரிக்கன்ட் என்றொரு நூலை எழுதியுள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு காவல் துறை அதிகாரி விஜயகுமார் வெளியிட்டுள்ள புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வீரப்பன் விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நூலின் அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் பேசியதாவது: வீரப்பன் மற்றும் விஜயகுமார் ஆகிய இருவரின் கதாபாத்திரங்களும் சுவாரசியமானவை. ஆனால் நான் விஜயகுமார் வேடத்தில் நடிக்கவே விருப்பப்படுகிறேன். ஏனெனில் அவர்தான் மிகவும் புத்திசாலித்தனமாகத் திட்டம் தீட்டி வீரப்பனைப் பிடித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

SCROLL FOR NEXT