முகப்பு
செய்திகள்

ரஜினிக்கு அடுத்ததாக சூர்யாவுக்குப் பெரிய மார்க்கெட் உள்ளது: சிங்கம் 3 தயாரிப்பாளர்

ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள்...

Updated On : 30 ஜனவரி 2017, 3:13 pm IST
பகிர்:

இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவாகியுள்ள சி 3 (சிங்கம் 3) படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா போன்றோர் நடித்துள்ளார்கள்.

டிசம்பர் மாத இறுதியில் வெளியாக இருந்த சிங்கம் 3, ஜனவரி 26 அன்று வெளிவருவதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் மீண்டும் மீண்டும் தள்ளிவைக்கவேண்டிய நிலைமை உண்டானது. இந்நிலையில் பிப்ரவரி 9 அன்று சி 3 படம் வெளிவரும் என்று தற்போது உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படக்குழு செய்தியாளர்களை நேற்று சந்தித்தது. அப்போது ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தைச் சேர்ந்த ஞானவேல் ராஜா கூறியதாவது:

Advertisement

Advertisement

உலகம் முழுக்க பிப்ரவரி 9-ம் தேதி சி 3 படம் வெளியாகவுள்ளது. படத்தை பிரிவியூவில் பார்த்த அனைவருக்கும் படம் மிகவும் பிடித்ததாகச் சொன்னார்கள். ரஜினிக்குப் பிறகு கோலிவுட்டில் அதிக மார்க்கெட் உள்ள நடிகர் சூர்யா. அவருக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா பகுதிகளில் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். எனவே சி3 தெலுங்குப் பதிப்பும் நல்ல வசூலைப் பெறும் என எதிர்பார்க்கிறோம். 

சி 3 படம் வெளியாகத் தாமதமானதற்கு நான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், வர்தா புயல், பணமதிப்பிழப்பு, ஜல்லிக்கட்டுப் போராட்டம் என பல்வேறு காரணங்களால் படம் வெளியாகத் தாமதமானது. பிப்ரவரி மாதம் ஸ்டூடியோ கிரீனுக்கு ராசியான மாதம். 10 வருடங்களுக்கு முன்பு கார்த்தி நடித்த பருத்தி வீரன் பிப்ரவரி மாதத்தில்தான் வெற்றி பெற்றது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments