விஜய் சேதுபதி நடிக்கும் கருப்பன்: செப்டம்பர் 29ல் வெளியீடு!
ஆயுத பூஜை அன்று அதாவது செப்டம்பர் 29-ல் வெளியாகவுள்ளதாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது...
ஆர். பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் - கருப்பன். கதாநாயகி - தன்யா. இசை - இமான்.
இந்தப் படம் ஆயுத பூஜை அன்று அதாவது செப்டம்பர் 29-ல் வெளியாகவுள்ளதாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் அதே நாளில் சிவகார்த்தியன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் வேலைக்காரன் படம் வெளிவர இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்தப் படம் டிசம்பர் 22 அன்று வெளிவரவுள்ளது.
Advertisement
Advertisement
இதையடுத்து கருப்பன் படம் செப்டம்பர் 29 அன்று வெளிவரத் திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 29, 30 மற்றும் அக்டோபர் 1, 2 ஆகிய நாள்கள் அனைத்தும் அரசு விடுமுறை தினங்கள். இதனால் தொடர்ந்து 4 தினங்கள் விடுமுறையாக உள்ளதால் இது வசூலுக்கு மிகவும் உதவும் என்பதால் அந்நாளில் வெளிவரவுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகிவரும் ஸ்பைடம் படம் செப்டம்பர் 27 அன்று வெளிவரவுள்ளது.