முகப்பு
செய்திகள்

14 வெட்டுக்களுக்குப் பிறகு காலா படத்துக்கு யு/ஏ வழங்கிய தணிக்கை வாரியம்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள காலா படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது...

Updated On : 5 ஏப்ரல் 2018, 2:45 pm IST
பகிர்:

கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 27-ம் தேதி படம் திரைக்கு வரவுள்ள நிலையில், 'காலா' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்றது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள காலா படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருந்ததால் 14 இடங்களில் வெட்டச் சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகே படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதில் படக்குழுவுக்குத் திருப்தியில்லை என்பதால் மறுதணிக்கைக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் தமிழ்த் திரையுலகில் அமலில் இருக்கும் வேலை நிறுத்தம் காரணமாக காலா படத்தின் தணிக்கை விவரங்கள் தொடர்பாக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments