பிக் பாஸ் நட்சத்திரங்கள் ஜோடியாக நடித்த படத்தின் டிரெய்லர்: சமூகவலைத்தளத்தில் அதிக வரவேற்பு!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் - பியார் பிரேமா காதல்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் - பியார் பிரேமா காதல்.
பாகுபலி 2 படத்தை வெளியிட்ட கே கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ஓய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. முழுக்க முழுக்க காதலை களமாக கொண்டு இப்படத்தை இளன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்துக்கு ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு, யுவன் ஷங்கர்ராஜா இசை.
இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிக் பாஸ் நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் இந்த டிரெய்லர் உடனடியாக யூடியூப் டிரெண்டிங்கில் முதல் இடத்தைப் பிடித்தது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.