இசைஞானி இளையராஜா பெயரில் இன்னொரு விஷயம்!
மாதவ் ராமதாஸன் மல்லுவுட்டின் பிரபல இயக்குநர். சுரேஷ் கோபி, பார்த்திபன் நடிப்பில், 2011-ம் ஆண்டு,
மல்லுவுட்டின் பிரபல இயக்குநர் மாதவ் ராமதாஸன். சுரேஷ் கோபி, பார்த்திபன் ஆகியோர் நடிப்பில், 2011-ம் ஆண்டு, இவர் இயக்கிய முதல் படமான மேல்விலாசம் சர்வதேச பூசான் திரைப்பட விழாவில் பங்கேற்றது. விருதுகளையும் கவனத்தையும் முதல் படத்திலேயே பெற்ற இயக்குநரானார் மாதவ்.
மேல்விலாசத்தைத் தொடர்ந்து சுரேஷ் கோபி, ஜெய சூர்யா, இந்திரன்ஸ் நடிப்பில் மருத்துவமனை முறைகேடுகளை மையப்படுத்தி அவர் இயக்கிய 'அப்போதேகேறி' என்ற படமும் பெரும் வரவேற்பைப் பெற்று மல்லுவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குநர்களின் பட்டியலில் இணைந்தார் மாதவ் ராமதாஸன். இந்நிலையில் அவரது மூன்றாவது படம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில், அண்மையில் அந்த சஸ்பென்ஸை உடைத்தார்.
'இளையராஜா' எனும் தலைப்பில் அவர் புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இப்படத்தின் முதல் காட்சி போஸ்டர் வெளியாகி மல்லுவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement
சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி உருவாகவிருக்கும் இந்தப் படத்தில் ஜெயசூர்யா, கின்னஸ் புகழ் நடிகர் பக்ரு உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கவிருக்கிறது. அண்மைக்காலமாக சில சர்ச்சைகளில் சிக்கிய இசைஞானி இளையராஜாவின் பெயரில் இந்தப் படம் உருவாகப் போவது அவருக்கு மகிழ்ச்சியளிக்குமா என்று தெரியாது, ஆனால் நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு இது மகிழ்வளிக்கும் ஒரு செய்திதான்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.