செய்திகள்

பொங்கலுக்கு வர்றோம்: ரசிகர்களுக்கு ஆறுதல் சொல்லும் சிம்பு!

எழில்

அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் விஸ்வாசம் படமும் சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் வந்தா ராஜாவா தான் வருவேன் படமும் பொங்கலுக்கு வெளியாவதாக ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் பேட்ட படமும் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பொங்கல் வெளியீடுகளில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கலுக்கு வர்றோம் என்று தனது ரசிகர்களுக்குத் தகவல் வெளியிட்டுள்ளார் சிம்பு. 

வந்தா ராஜாவா தான் வருவேன் படம் பொங்கலுக்கு வெளிவருவதற்குத் தயாரிப்பாளர் சங்கம் முட்டுக்கட்டை போடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியான படம் - அன்பானவன் அசராதவன் அடங்காதவன். யுவன் இசையமைத்த இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சனாகான் போன்றோர் நடித்தார்கள். சிம்பு 3 விதமான கெட்டப்களில் நடித்தார். இப்படத்தின் தயாரிப்பாளர் - மைக்கேல் ராயப்பன். அவர், சிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி அறிக்கை வெளியிட்டார். இதனால் இப்பிரச்னையைத் தீர்த்த பிறகு வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் கவனம் செலுத்துமாறும் அதுவரை அப்படத்தை வெளியிடவேண்டாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சிம்புவிடம் கோரிக்கை வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இத்தகவல் வெளியான பிறகு சிம்பு ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் சிம்புவுக்கு ஆதரவாகப் பேசி விடியோ வெளியிட்டுள்ளார்கள். இதையடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள சிம்பு அதில் கூறியிருப்பதாவது:

திரைத்துறையில் அண்மையில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து வருந்தாதீர். எந்தத் தனி நபர் முடிவும் நம்மை ஓரங்கட்ட முடியாது. எந்த முடிவாக இருந்தாலும் அது குழு உறுப்பினர்களால், கவுன்சில் உறுப்பினர்களால் எடுக்கப்படுவதை நாம் உறுதி செய்வோம். அதனால் பதற்றப்பட வேண்டாம். யாரையும் விமரிசிக்கவேண்டாம். எப்போதும் அன்பைப் பரப்புங்கள். நாம் கடமையைச் செய்வோம், தானாக வழி பிறக்கும். பொங்கலுக்கு வர்றோம் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT