முகப்பு
செய்திகள்

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ விரைவில் தொடங்கும்: இயக்குநர் சிம்பு தேவன் நம்பிக்கை!

இதுவரை ஐந்து படங்களை இயக்கியுள்ள இயக்குநர் சிம்புதேவன், அடுத்ததாக வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் புதிய படமொன்றை இயக்கியுள்ளார்...

Updated On : 20 மே 2019, 12:56 pm IST
பகிர்:

இதுவரை ஐந்து படங்களை இயக்கியுள்ள இயக்குநர் சிம்புதேவன், அடுத்ததாக வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் புதிய படமொன்றை இயக்கியுள்ளார். 

இதுகுறித்து ட்விட்டரில் சிம்பு தேவன் கூறியுள்ளதாவது:

வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் அடுத்தப் படத்தை இயக்கியுள்ளேன். டிரெண்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்தைத் தயாரித்துள்ளார். 

Advertisement

Advertisement

குறுகிய காலத்தில் என்னுடைய படம் முடிக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆதரவுடன் இன்று முதல் படத்தின் விளம்பர வேலைகள் ஆரம்பித்துள்ளன. உங்களுக்குப் பிடித்த படமாக இது இருக்கும். 

எல்லாவிதமான நேர்மறை எண்ணங்களுடன் விரைவில் இம்சை அரசன் படமும் மீண்டும் ஆரம்பமாகும் என நம்புகிறேன். 

இந்த நேரத்தில் வெங்கட் பிரபுவுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.