FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூன் 2 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Updated On : 3 ஜூன் 2026, 9:57 pm IST
கே. அண்ணாமலை. - கோப்புப் படம்
பகிர்:

ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார்: அமெரிக்கா

திவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்!

அமெரிக்கா - ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு!

அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

லெபனான், காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்கா உடனான அனைத்துத் தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைகளையும் நிறுத்திவைப்பதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி!

மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய அமைச்சரவையில் இன்று (ஜூன் 2) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதற்காக ரூ. 36,585 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. 2019 ஏப்ரல் 1 முதல் 2026 மார்ச் 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு இந்தக் கடன் தள்ளுபடி பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மீது பிரதமருக்கு அக்கறை இருந்தால் கல்வி அமைச்சரை பதவி நீக்கம் செய்திருப்பார்: ராகுல்

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) விவகாரத்தில் மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பிரதமர் பதவி நீக்கம் செய்திருப்பார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

பாலியல் தொழிலில் ஈடுபடுவோருக்கான அடிப்படை உரிமைகளை மறுக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்

கேரளம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் போதைப்பொருள் பரவல்!

கேரளம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் போதைப்பொருள் பரவல் என்று அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆளுநரின் செயலாளராக சஜன் சிங் சவான் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் ஆட்சியராக இருந்த சரவணன் சென்னை மாநகராட்சி புதிய இணை ஆணையராகவும், நிதித் துறை ஆணையராக இருந்த பிரதீவ்ராஜ் கரூர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கணவரை முதுகில் சுமந்து மக்கள் குறைதீர் கூட்டத்துக்குச் சென்ற பெண்!

மேற்கு வங்கத்தில் கணவரை முதுகில் சுமந்து கொண்டு மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை சென்றார்.

11 நாள்களில் ரூ. 8 விலையேற்றம்! முதல்வர் அமைதியாக இருப்பது என்? சிபிஎம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் முதல்வர் வி.டி. சதீசன் மெளனம் காப்பதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் இன்று (ஜூன் 2) குற்றம் சாட்டினார்.

கடந்த 11 நாள்களில் மட்டும் ரூ. 8 வரை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாகவும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மாபெரும் போராட்டத்தை நடத்தியவர் தற்போது ஆட்சியில் அமர்ந்ததும் அமைதியாகிவிட்டதாகவும் விமர்சித்தார்.

177 தொகுதிகள் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு! பாஜக மீது மமதா குற்றச்சாட்டு!

மேற்கு வங்கத்தில் 177 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையின் போது, பாஜக முறைகேடு செய்து வெற்றிபெற்றதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. ராசா கேள்வி

தமிழ்நாட்டில் தற்போதைய சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா இன்று (ஜூன் 2) கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டின் புதிய ஆட்சி அமைந்த பிறகு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்ட பிறகு குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால், அதற்கு திமுக மீது பழி போடுவது எந்த வகையில் நியாயம் எனவும் வினவியுள்ளார்.

விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை

முதல்வர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை என என திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. இராசா இன்று (ஜூன் 2) குற்றச்சாட்டினார்.

எனக்கு நல்லா வார்த்தை வந்துவிடும் என்கிறார்? இது ஒரு முதல்வர் பேசக்கூடிய முறையா?

மேடையில் கையை ஆட்டிப் பேசுவதைப்போன்று சட்டப்பேரவையில் உதயநிதியின் கேள்விகளுக்கு ஏன் விஜய்யிடம் பதில் இல்லை?

சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

தலைமை மாற்றம்!

summary

பஞ்சாப் மாநில காங்கிரஸில் தலைமை மாற்றத்தை மேற்கொள்ளக் கட்சி பரிசீலித்து வருவதாக எழுந்த ஊகங்களை, அம்மாநில பொறுப்பாளரான காங்கிரஸ் பொதுச் செயலாளர் பூபேஷ் பாகேல் நிராகரித்தார்.

நீட் விவகாரத்தில் கைதானவருக்கு சொந்தமான கட்டடம் இடிப்பு!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட பி.வி. குல்கர்னி என்பவருக்கு சொந்தமான கட்டடத்தின் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகள் செவ்வாய்க்கிழமை இடிக்கப்பட்டன.

எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை?

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்?

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பனூரில் 2,000 ஆண்டுகள் பழமையான முதல் தமிழி நடுகல் கல்வெட்டு கண்டுடெடுப்பு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான முதல் தமிழி நடுகல் கல்வெட்டு கண்டெடுக்கப்படுக்கப்பட்டுள்ளது.

ரத்ன குமாரின் 29 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இயக்குநர் ரத்ன குமாரின் 29 திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் - ப. சிதம்பரம் சந்திப்பு

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.

தலைமைச் செயலகம் சுற்றி புகைமூட்டம்

சென்னை தலைமைச் செயலகம் சுற்றுப் பகுதிகளில் திடீர் புகைமூட்டம் ஏற்பட்டதால், அங்கிருக்கும் மக்களுக்கு சுவாசிக்க சிரமம் ஏற்பட்டது.

இபிஎஸ் கேள்வி

சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மனு வாபஸ்

வருமான வரித்துறை சோதனை அடிப்படையில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு எதிராக வழக்குப்பதியக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாரரே திரும்பப் பெற்றுக் கொண்டார்.

சிபிஎஸ்இ தளம்

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் மறுமதிப்பீடு இணையதளத்தை மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.

நிதின் நபினை சந்திக்கிறார் அண்ணாமலை

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று(ஜூன் 2) சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜாவின் ராஜாங்கம்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் போட்டியா?

தமிழ்நாடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

தங்கம், வெள்ளி விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இன்று(ஜூன் 2) விற்பனை செய்யப்படுகிறது.

நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான தொலைப்பேசி உரையாடலின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததாக ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சண்டை நிறுத்தம்

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இடையேயான தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments