ஓமன் மீது குண்டு வீச்சு நடத்தப்படும்: டிரம்ப் அச்சுறுத்தல்!
ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே மேற்கொள்ளும் ஒப்பந்தத்தில் ஓமன் தலையிட்டால் அந்நாட்டின் மீது குண்டு வீசப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே மேற்கொள்ளும் ஒப்பந்தத்தில் ஓமன் தலையிட்டால் அந்நாட்டின் மீது குண்டு வீசப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்து ஈரான் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அதேநேரம், ஹோர்முஸ் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பாக ஓமனுடனும் ஈரான் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இதுபற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில், “ஹோர்முஸ் விவகாரத்தில் ஓமன் தலையீடு செய்தால், அவர்கள் மீது கடுமையான குண்டுவீச்சை நடத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
ஹோர்முஸின் வடக்குப்பகுதியில் ஈரானின் கடற்கரையும், தெற்குப் பகுதியில் ஓமனும் அமைந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது தொடர்பாக ஈரானும் ஓமனும் இணைந்து கூட்டுப் பிரகடனத்தை உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், போர் காரணமாக மூடப்பட்ட ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் தற்போது இருப்பதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். மேலும், ஹோர்முஸை அமெரிக்காவின் ஒரு பகுதியாக அறிவிப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
ஈரான் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “ஹோர்முஸ் எப்போதும் ஈரானுடையதே” எனக் கூறியிருந்தனர்.
ஈரான் மீது தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை வைத்து வரும் டிரம்ப், தற்போது ஓமன் மீது குண்டு வீசப்படும் என அறிவித்திருப்பது பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
US President Trump has warned that Oman would be bombed if it intervened in the agreement between Iran and the US regarding the Strait of Hormuz.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.