ஓமன் அருகே சரக்குக்கப்பல்களை ஈரான் தாக்கியதில் மாலுமி பலி! இந்தியா கண்டனம்
ஹோர்முஸ் நீரிணையில் ஓமன் அருகே சரக்குக்கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் பற்றி...
ஹோர்முஸ் நீரிணையில் ஓமன் அருகே சரக்குக்கப்பகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் மாலுமி ஒருவர் பலியானதற்கு இந்திய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 14) கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய போர் ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தான இடைக்கால ஒப்பந்தத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை அருகே மூன்று வணிகக் கப்பல்களின் மீது ஈரானிய படைகள் திடீர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்கா செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) 80-க்கும் அதிகமான ஈரானின் கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியது.
Advertisement
Advertisement
இதனால் இரு நாடுகளுக்கிடையேயும் மீண்டும் போர் தொடங்கியுள்ளது. மேலும், ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாகவும் ஈரான் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையில் ஓமன் அருகே சென்று கொண்டிருந்த இரண்டு சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலால் இந்திய மாலுமி ஒருவர் பலியானார். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணித்த எம்.டி. அல் பஹியா மற்றும் எம்.டி. மொம்பாசா ஆகிய இரண்டு சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலால் இந்தியா மிகுந்த கவலை கொண்டுள்ளது. இந்த இரண்டு கப்பல்களில் இருந்த 46 மாலுமிகளில் 30 பேர் இந்தியர்கள்.
இந்தத் தாக்குதலால் ஒரு இந்திய மாலுமி பலியானதோடு 10 பேர் காயமடைந்துள்ளனர். பலியான மாலுமியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதோடு காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் மாலுமி மற்றும் கப்பல்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் இதுமாதிரியான தாக்குதல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். பொதுமக்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
The Indian government condemned on Tuesday (July 14) the attack carried out by Iran on a cargo ship near Oman in the Strait of Hormuz, which resulted in the death of a seafarer.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.