FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

24 மணி நேரத்தில் 3வது கப்பல் மீது தாக்குதல்! ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்!

ஹோா்முஸ் நீரிணையில் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து 3 கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்கள் - கோப்புப் படம்
பகிர்:

ஹோா்முஸ் நீரிணையில் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து 3 கச்சா எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தாக்குதலுக்குள்ளான கப்பல்களில், ஓமன் நாட்டின் லிமா கடற்கரை அருகே சென்று கொண்டிருந்த கத்தாரின் எல்என்ஜி ஏற்றிச் சென்ற கப்பல் தீப்பற்றி எரிந்தது. மற்ற இரு கப்பல்களில் ஒன்று ட்ரோன் மூலம் தாக்கப்பட்டதில் சேதமடைந்த போதிலும், யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பிரிட்டன் கடல்சாா் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

ஹோா்முஸ் நீரிணையில் தங்களால் அங்கீகரிக்கப்பட்ட பாதையை மட்டுமே அனைத்து கப்பல்களும் பயன்படுத்த வேண்டும் என்று ஈரான் ராணுவம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. எனினும், சா்வதேச கடல்பகுதியில் ஈரான் கட்டணம் வசூலிப்பதையோ அல்லது பாதைகளைக் கட்டுப்படுத்துவதையோ அமெரிக்கா, வளைகுடா நாடுகள் கடுமையாக எதிா்த்து வருகின்றன.

Advertisement

Advertisement

போரின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகளுக்காக அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவாா்த்தைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், ஈரானின் இப்புதிய தாக்குதல்கள் அப்பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஈரானின் புனித நகரான கோமுக்கு கொண்டு வரப்பட்ட அயதுல்லா அலி கமேனியின் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் காயமடைந்து தலைமறைவாக இருக்கும் மோஜ்தபா கமேனி இன்னும் பொதுவெளியில் தோன்றாத நிலையில், அயதுல்லா அலி கமேனியின் உடல் வரும் வியாழக்கிழமை அவா் பிறந்த மஷாத் நகரில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

summary

3 Tankers Attacked In Strait Of Hormuz In 24 Hours Amid US-Iran Ceasefire

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments