செய்திகள்

இயக்குநர் வேலு பிரபாகரன் கைது

DIN

இந்து கடவுள்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருப்பர் கூட்டம் என்ற பெயரில் செயல்படும் யூடியூப் சேனலில் இந்து மதக் கடவுள் முருகப் பெருமானையும், கந்த சஷ்டி கவசத்தையும் ஆபாசமாக பேசி விடியோ வெளியிட்டுள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 13 ஆம் தேதி புகாரளித்தனர். இதுகுறித்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர், கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது வழக்குப் பதிந்து, அந்த அமைப்பைச் சேர்ந்த செந்தில்வாசன், சுரேந்திரன், சோமசுந்தரம், குகன் ஆகிய நால்வரைக் கைது செய்துள்ளது. கருப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதோடு, அதன் யூடியூப் சேனலில் உள்ள விடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு ஆதரவாகவும் இந்து கடவுள்கள் குறித்து யூடியூப் சேனலில் அவதூறாகவும் கருத்து பரப்பியதாக இந்து மக்கள் கட்சி அளித்த புகாரையடுத்து திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரனை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலம்பம் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்

சேலம் மாவட்டத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழா

உயா் மின்னழுத்த கம்பி அறுந்து தொழிலாளி உயிரிழப்பு

மெக்ஸிகோவுக்கு முதல் பெண் அதிபா்

முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கக் கூட்டம்

SCROLL FOR NEXT