முகப்பு
செய்திகள்

பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்தார் பாடகி சுசித்ரா: ரசிகர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

போட்டி கடுமையாக இருப்பது போலத் தோன்றுகிறது என்று கமலிடம் இந்நிகழ்ச்சி பற்றிய...

Updated On : 2 நவம்பர் 2020, 10:21 am IST
பகிர்:

புதிய போட்டியாளராக தேர்வாகி, பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்துள்ளார் பாடகி சுசித்ரா.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியைப் பிரபல நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

முதல் நாளில் ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்தார்கள். பிறகு பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா புதிய போட்டியாளராக நுழைந்தார். 

Advertisement

Advertisement

அர்ச்சனாவுக்கு அடுத்ததாக வைல்ட்கார்ட் போட்டியாளராக பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்துள்ளார் பிரபல பாடகியும் ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா. இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் சுசித்ராவால் பரபரப்பும் சுவாரசியமும் உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

முதல் சீசனிலேயே என்னை அழைத்தார்கள். இப்போதுதான் அதற்குரிய தருணம் வந்துள்ளது. ஒவ்வொரு சீசனை விடவும் தற்போது போட்டி கடுமையாக இருப்பது போலத் தோன்றுகிறது என்று கமலிடம் இந்நிகழ்ச்சி பற்றிய தன் கருத்தை சுசித்ரா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments